Create Free Blog | Random Blog »   Report Abuse | Login   

 

தமிழ்த் தென்றல்

ஆக்கபூர்வமான அலசல்கள், விமர்சனங்கள், செய்திகள் மற்றும் இலக்கியம்

ஆத்திரப் பொழுதில் ஒரு நொடி அமைதிச் சிந்தனை ஆயிரம் நொடிகள் பின்விளைவுகளை தகர்த்துப் பாதுகாக்கும்

February25
ஆத்திரப் பொழுதில் ஒரு நொடி அமைதிச் சிந்தனை ஆயிரம் நொடிகள் பின்விளைவுகளை தகர்த்துப் பாதுகாக்கும்
 
நாம் மிகவும் சினமாக இருக்கும் போது உடனடியாக எந்த பதிலும் அளிக்காது அமைதி காதல் அந்த ஆத்திர தீயினால் ஏற்படும் எதிர்/தீய விளைவுகளை தடுத்து/தவிர்த்து விடலாம்.
 
ஆங்கில மூலம்: A moment of patience in a moment of anger can help you avoid thousands of moments of sorrow.

[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்]

என்றென்றும் நாம் நினைவில் நிறுத்த வேண்டிய சில பொன்மொழிகள்

February25
என்றென்றும் நாம் நினைவில் நிறுத்த வேண்டிய சில பொன்மொழிகள்  
  1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
  2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
  3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
  4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத்  தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
  5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
  6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
  7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
  8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
  9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்  வாழ்நாளே இழப்பு.
  10. முழுமையான மனிதர்கள் இருவர்.  ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
  11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
  12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
  13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
  14. காரணமே இல்லாமல் கோபம்  தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
  15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
  16. யார் சொல்வது சரி என்பதல்,  எது சரி என்பதே முக்கியம்
  17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
  18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
  19.  நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
  20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
  21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
  22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
  23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
  24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
  25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்
  26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
  27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,  இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
  28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
  29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,  நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
  30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.  சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
  31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
  32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
  33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது 

[நன்றி: விஜயராகவன்/மேடவாக்கம் ஸ்ரீனிவாச ஆலயம் இணையக் குழு உறுப்பினர்]  

Share SocialTwist Tell-a-Friend 

விதியை எப்போதும் குறை கூறாமல் நம் முயற்சியை கொடுத்து வெற்றியை நோக்கி பயணிப்போம்

February23
விதியை எப்போதும் குறை கூறாமல் நம் முயற்சியை கொடுத்து வெற்றியை நோக்கி பயணிப்போம்
 
இன்றைய காலை நற்செய்தி (ஒரு குட்டிக் கதை மூலமாக). கடலில் இரு கப்பல்கள் இரு வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கின்றன. இவை காற்றின் பலத்தினை அல்லது பாதை நம்பி செல்லவில்லை. தங்களது கட்டுமானத்தினை நம்பியே சென்று கொண்டிருக்கின்றன. அது போல நமது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிப்பது நமது தலை விதி மட்டும் அல்ல. நமது முயற்சியும் விருப்பமும் தான்.

ஆங்கில மூலம் படத்தில் உள்ளது:

[நன்றி: தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ்/காக்னிசன்ட்]

ஸ்னேஹா — தற்கொலை தடுப்பு தன்னார்வு நிறுவனம் இன்னும் பல தொண்டர்களை எதிர்ப்பார்கிறது

February22
ஸ்னேஹா – தற்கொலை தடுப்பு தன்னார்வு நிறுவனம் இன்னும் பல தொண்டர்களை எதிர்ப்பார்கிறது 
 
சென்னையைத் தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ஸ்னேஹா என்னும் தன்னார்வு நிறுவனம் தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆதரவு தரும் சொற்களை பேசியும் அவர்களை அந்த எண்ணத்திலிருந்து காத்து வருகிறது. அவர்களை நாடும் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருவதால் இணையம்/தொலைபேசி 
சார்ந்த சேவைகளை அவர்கள் 24 மணி நேரமாக மாற்றி உள்ளனர். 
 
இந்த இயக்கங்களுக்கு உதவ தன்னார்வு தொண்டர்கள் தேவைப்படுகின்றனர்.   தொண்டர்களுக்கு சிறப்பான கல்வித் தொகுதி எதுவும் தேவையில்லை. உதவி என்று வருவோரின் குறைகளை பொறுமையுடன் கேட்க வேண்டும்; அவர்களுக்கு ஆறுதல் சொல்லத் தெரிய வேண்டும்; நல்ல தீர்வை நோக்கி அவர்கள் பயணிக்க உதவ வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அவர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: 2464 0050 or 2464 0060 அல்லது help@snehaindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவும் பிப்ரவரி 28 க்கு முன் தொடர்பு கொள்ளலாம்.
Share SocialTwist Tell-a-Friend 

வணிகத்தில் புதுமை படைக்க பாரதி ஏர்டெல் வழங்கும் ‘புதுமை கடனுதவி’ (Innovation Fund)

February22
வணிகத்தில் புதுமை படைக்க பாரதி ஏர்டெல் வழங்கும் ‘புதுமை கடனுதவி’ (Innovation Fund)
 
தாங்கள் ஒரு தொழில்முனைவராக இருந்தால் தங்கள் தொழிலில் புதமைகள் புகுத்தி சாதனைகளைப் படிப்பதற்கு இப்போது பணம் ஒரு தடைக்கல் இல்லை. பாரதி ஏர்டெல் நிறுவனம் ‘வணிகத்தில் புதுமை படைக்க புதுமை கடனுதவி’ (Bharti Airtel Innovation Fund) ஒன்றினை நிறுவியுள்ளது. இதன் முகவரி: http://airtel.in/innovationfund
 
இணையம் வழியாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய ஏர்டெல் இணையதள முகவரியினை சொடுக்கவும்.

2010 அரசு விடுமுறை அட்டவணை

February22
2010 அரசு விடுமுறை அட்டவணை
 
2010 ஆண்டுக்கான அரசு மற்றும் வங்கிகளுக்கான எளிய அட்டவணை ஒன்றினை இரு இணையதளங்களில் வெகு நேரம் தேடிய பின் கண்டேன். இன்னும் பலருக்கும் இந்த விடுமுறை நாள் அட்டவணை தேவைப்படும் என்பதால் இந்தப் இடுகையில் அவற்றின் முகவரிகளை பதிவு செய்கின்றேன்.
 

அண்ணா நூற்றாண்டு விழா குறித்த தமிழக அரசின் இணைய தளம்

February22
அண்ணா நூற்றாண்டு விழா குறித்த தமிழக அரசின் இணைய தளம்
 
அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த இணைய தளம் ஒன்றினை தமிழக அரசு நிறுவியுள்ளது. இதை இன்று சிறிது வலையுலாவும் போது காண நேர்ந்தது. அதன் முகவரி: http://anna100.tn.gov.in/

சென்னை மேடவாக்கம் ஸ்ரீ பத்மாசினி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் இணையக்குழாம்

February22
சென்னை மேடவாக்கம் ஸ்ரீ பத்மாசினி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் இணையக்குழாம்
 
சென்னை மேடவாக்கம் அருகே ஸ்ரீ பத்மாசினி தாயாருடன் எழுந்தருளும் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் திருவிழா அறிவிப்பு மற்றும் ஆலய செய்திகள் குறித்த ஒரு இணையக் குழாம் [Groups] ஒன்றினை இங்கு காணலாம். விருப்பமுள்ள பக்தர்கள் இதில் இணைந்து கொண்டு பகவத் செய்திகளை தெரிந்து கொண்டு இறைவனின் இன்னருளை பெற வேண்டுகிறோம்:
 

மன அழுத்தம் மாய்த்த மா-மனிதர்

February22
மன அழுத்தம் மாய்த்த மா-மனிதர்
 
கடந்த சில வாரங்களாக ‘காணவில்லை’ என்று செய்திகளையும் ஊடகங்களையும் பரபரப்பாக்கிய டபுள்யு. ஆர். வரதராஜன் அவர்களின் பூத உடல் நேற்று அழுகிய நிலையில் சென்னை போரூர் ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  [செய்தி ஆதாரம்: http://timesofindia.indiatimes.com/india/Body-of-CPM-leader-who-went-missing-found-in-Chennai-lake/articleshow/5600952.cms]
 
அவர் எழுதியுள்ள இரண்டு கடிதங்களில் கூறப்பட்டுள்ள காரணம் அரசியல் துறையில் பல இடர்களை கடந்து வந்தாலும் தனது சொந்த தனி நபர் வாழ்வில் தோல்வியைத் தழுவி உள்ளதாகவும் விரக்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அவரின் ஆன்மா சாந்தி அடைய ஒரு இரண்டு நிமிடங்கள் மவுனம் கடைப் பிடிப்போம்.

காலை நல்ல செய்தி இப்போது மனங்குளிர் படமாக …

February22

காலை நல்ல செய்தி இப்போது மனங்குளிர் படமாக …

சிறிது காலம் முன் நாம் தொடங்கி வாய்த்த ‘இன்று காலை ஒரு நல்ல செய்தி’ தொடர் இப்போது செய்தியுடன் ஒரு நல்ல இயற்கை படம் ஒன்றினையும் தாங்கி வருகிறது. இதன் குறிக்கோள் — கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தாகவும், நம்மை மேலும் ஊக்கப் படுத்தியும், நமது அன்றாட பணிகளை இன்னும் புத்துணர்வோட செய்ய உதவ வேண்டும் என்பதே.

கருத்தக்களை படங்களுடன் தேர்வு செய்தும், தனது மின்னஞ்சல் குழாம் வழியே அனுப்பி உதவியும், அதனை எமது பதிவில் அனைவரின் நலனுக்காகவும் பதிவு செய்ய அனுமதித்த தோழி நிர்மலா மேரி ஜேம்ஸ் [காக்னிசன்ட்] அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றி.

« Older Entries