சென்னை வேளச்சேரி விஜயநகர் சாலை சந்திப்பில் தவறான வழிகாட்டி
சென்னை வேளச்சேரி விஜயநகர் சாலை சந்திப்பில் தவறான வழிகாட்டி
சென்னை வேளச்சேரி விஜயநகர் சாலை சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கிக்கும் தண்டபாணி மின்னணு கடைக்கும் ஒரு நேர்க்கோட்டில் அமைந்தவாரும், சாலை நடுவண் பிரிவு சுவரில் அமைக்கப் பட்டிருப்பும் ‘U திருப்பம் தடுக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பில், சித்திரம் கூறும் செய்தி “U திருப்பம் செய்யலாம்” என்பது. ‘U’ வின் குறுக்கே போட வேண்டிய குறுக்குக் கோட்டினை மறந்துவிட்டிருக்கின்றனர்.
இதைப் பற்றிய ஒரு கவன ஈர்ப்பு மடல் சென்னை மாநகராட்சியிடம் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த சாலைப் பகுதியை பயன்படுத்தும் மக்கள் இதை கவனத்தில் கொண்டு அங்கிருக்கும் காவலரிடம் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்தல் நன்மை பயக்கும்.
|
|
|
